உலக கோப்பையில் சுழற்சி முறையில் வீரர்கள் களம் இறக்க படுவார்கள் லிராட் கோலி திட்டவட்டம்

50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் வருகிற மே 30ந் தேதி தொடங்க உள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ ஏற்கெனவே அறிவித்து விட்டது. இந்நிலையில் உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்க நாளை இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது இந்திய அணி.

இந்நிலையின் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்த்திரி ஆகியோர் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர். அப்போது விராட் கோலி கூறியதாவது.,

தற்போது உலக கோப்பை போட்டிகளில் விளையாட இந்திய அணி தயார் நிலையில் உள்ளது. இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் உச்சகட்ட எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது அனைத்து வீரர்களுக்கும் சவாலாக இருக்கும். அதை நாங்கள் நிச்சயம் பூர்த்தி செய்வோம்.

இம்முறை உலக கோப்பை அணியில் தேர்வான ஒவ்வொரு வீரருக்கு சுழற்சி முறையில் களம் இறக்கப்படுவார்கள். அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

அனைத்து வீரர்களும் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட்டு விளையாடினால் கோப்பையை மீண்டும் கொண்டு வர வாய்ப்பு உள்ளது என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

அந்த தோல்விக்கு பின் மீடியாக்கள் எங்களை தீவிரவாதிகள் போல் நடத்தினர் தோனி வருத்தம்

கடந்த 2007ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்றது. இத்தொடரில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியிலும் இலங்கைக்கு எதிரான போட்டியிலும் படு தோல்வி அடைந்தது. இதனால் அந்த உலக கோப்பையில் லீக் சுற்றிலே வெளியேறி அதிர்ச்சி அளித்தது இந்திய அணி.

இதனால் உலக கோப்பை அணியில் இடம் பெற்ற அனைத்து வீரர்களும் மீடியாக்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டன. இத்தொடரில் இரண்டு முக்கிய போட்டிகளில் டக் அவுட் ஆனதால் தோனியும் கடுமையான விமர்சனத்தை சந்தித்தார்.

இந்நிலையில் 2007 உலக கோப்பை தோல்வி குறித்து தோனி கூறியிருப்பதாவது, இன்னும் வங்க தேசத்துக்கு எதிரான தோல்வி இன்னும் என்னை காயப்படுத்தி கொண்டு தான் உள்ளது. 2007 உலக கோப்பை தொடரில் லீக் சுற்றில் வெளியேறினோம். இத் தோல்விக்கு இந்திய வீரர்கள் யாரும் துளியும் வருத்தபட வில்லை என மக்கள் கருதினார்கள். மீடியாக்கள் எங்களை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

ஒரு விளையாட்டு வீரராக வெற்றி தோல்வி இரண்டையும் சமாளிக்க தெரிய வேண்டும். தோல்விக்கு பின் மைதானத்தில் அழுவதாலோ அல்லது ஃபிரஸ் மீட் டில் அழுவதாலோ எதுவும் நடக்க போவதில்லை.

நாங்கள் மேற்கு இந்திய தீவுகளில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தோம். அப்போது விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாங்கள் தரையிறங்கிய உடன் மீடியா எங்களை சூழ்ந்து கொண்டது.

போலிசார் எங்களை ஒரு வேனில் ஏற்றி அங்கிருந்து அப்புறவு படுத்தினர். அந்த வேனில் நான் சேவாக் மற்றும் ஹர்பஜன் சிங் அருகில் அமர்ந்திருந்தேன். வேன் 60-70 கி.மீ வேகத்தில் சென்றது. எங்கள் வேனை துரத்தி கொண்டு மீடியாக்களின் வாகனம் வந்தது. அந்த வாகனத்தின் மேல் பெரிய விளக்குகளும் கேமராக்களும் இருந்தது. விடாமல் துரத்தி கொண்டே வந்தனர். மீடியாக்கள் எங்களை பெரிய குற்றத்தை செய்த தீவிரவாதிகளை போல துரத்தினர். ஒரு கட்டத்தில் எங்களை பிடித்து விட்டனர்.

நாங்கள் 20 நிமிடம் காவல் நிலையத்தில் இருந்தோம். மீடீயாக்கள் கலைந்த பின் நாங்கள் எங்கள் காரில் ஏறி வீடு திரும்பினோம். இந்த சம்பவம் என்னை நல்ல கிரிக்கெட்டராகவும், நல்ல குணமுடைய மனிதனாக மாற்றியது என தெரிவித்தார்.

உலக கோப்பையை இந்த அணி தான் வெல்லும் திட்டவட்டமாக தெரிவித்த கம்பீர்

அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டிகள் வருகிற மே 30ந் தேதி இங்கிலாந்து நாட்டில் நடக்க உள்ளது.

இம்முறை உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிக்கு தான் வாய்ப்பு உள்ளது எனவும், ஆஸ்ரேலியா, நியூஸ்லாந்து, வெஸ்ட் இன்டிஸ் அணிகள் உலக கோப்பையை வெல்ல கடும் சவால் அளிக்கும் அணிகள் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஆஸ்ரேலியா அணிதான் உலக கோப்பையை வெல்லும் என கருத்து தெரிவித்துள்ளார்.

இம்முறை உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகள் அனைத்தும் ஏறக்குறைய சமபலத்தில் உள்ளன. போட்டிகள் பார்ப்பதற்கு சுவாரஷ்யமாக இருக்கும் என நினைக்கிறேன். உலக கோப்பை போட்டிகளில் விளையாட போகும் வீரர்கள் சுயநலமின்றி தங்கள் அணி வெற்றி பெற உழைக்க வேண்டும்.

என்னை பொறுத்த வரை இந்த முறை உலக கோப்பையை வெல்ல ஆஸ்ரேலியா அணிக்கு தான் அதிக வாய்ப்பு. இங்கிலாந்து இந்திய அணிகளுக்கு வாய்ப்பு இரண்டாவது தான். இந்த முறை உலக கோப்பை போட்டிகளில் ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி அதிக ரன்கலை குவிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.