சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து யுவ்ராஜ் சிங் ஓய்வு?

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர் யுவ்ராஜ் சிங். கடந்த 2011ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது போது அத்தொடர் முழுவதும் ஆல் ரவுண்டராக ஜொலித்தவர் யுவராஜ் சிங்.

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த பின் இந்திய அணியில் தனது இடத்தை தக்க வைத்து கொள்ள முடியாமல் தவித்தார். கடந்த 2017ம் ஆண்டு வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணியில் கடைசியாக இடம் பெற்றிருந்தார். தற்போது இந்திய அணியில் அணியில் இருந்து முழுமையாக ஓரம் கட்டப்பட்ட நிலையில், ஐபிஎல் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.

இந்நிலையில் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து யுவ்ராஜ் சிங் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், முதல் தர மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற யுவராஜ் சிங் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக விரைவில் பிசிசிஐயிடம் பேசி முடிவு செய்ய உள்ளார். வெளிநாடுகளில் நடக்கும் டி20 தொடரில் பங்கேற்க யுவராஜ் சிங் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். கனடாவில் நடக்கும் ஜிடி20 போட்டி, அயர்லாந்து, ஹாலந்து, கரீபியன் ஆகிய நாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் விளையாட விருப்பமாக இருப்பதால், பிசிசிஐ அனுமதியைக் கோருகிறார்.

ஒரு வேளை பிசிசிஐ வெளிநாட்டு தொடரில் விளையாட அனுமதி அளித்தால், உடனே தனது ஓய்வை அறிவிப்பார். முதல் தர கிரிக்கெட்டில் இருந்து யுவ்ராஜ் ஓய்வு பெற்றாலும், பிசிசிஐயின் பதிவு பெற்ற டி20 வீரராக தான் இருப்பார். இதனால் யுவ்ராஜ் சிங் விஷயத்தில் பிசிசிஐ விதிகளை நன்கு ஆராய வேண்டியுள்ளது.

கதிகலங்கி நிற்கும் சி.எஸ்.கே மும்பை அணியில் இடம் பெறும் அதிரடி இடக்கை வீரர் யுவ்ராஜ் சிங்

இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இரண்டாவது முறையாக மோத உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. இதற்கு முன் இவ்விரு அணிகளும் மோதிய போது 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது மும்பை அணி.

மும்பை அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி ஆறில் வெற்றியையும், நான்கில் தோல்வியையும் அடைந்து புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்கு குவிண்டன் டி காக் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இரு பேட்ஸ்மேன்கள் மட்டுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 10 போட்டிகளில் டிகாக் 378 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 241 ரன்களை அடித்துள்ளனர்.

தொடர்ந்து அந்த அணிக்கு மிடில் ஆர்டர் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் இந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளில், எஸ்.ஆர்.ஹெச் அணியுடன் 25 பந்தில் 21 ரன், ஆர்.சி.பி அணியுடன் 29 பந்தில் 29 ரன், எஸ்.ஆர்.ஹெச் அணியுடன் 21 பந்தில் 25 ரன், கே.கே.ஆர் அணியுடன் 11 பந்தில் 5 ரன் மட்டுமே எடுத்துள்ளார்.

Yuvraj singh

இதனால் இன்றைய போட்டியில் மிடில் ஆர்டர் பேட்டிங்கை வலுப்படுத்த சூர்ய் குமார் யாதவ் நீக்கப்பட்டு, யுவ்ராஜ் சிங் அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எதிர்பார்க்கப்படும் மும்பை அணி: ரோகித் ஷர்மா, குவிண்டன் டி காக், யுவ்ராஜ் சிங், க்ருணால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, கைரான் பொல்லார்ட், மயங்க் மார்கண்டே, ராகுல் சஹர், பென் கட்டிங், லசித் மலிங்கா, ஜஸ்பிரித் பும்ரா.

இனியும் யுல்ராஜ் தேவையா அதிரடி முடிவு எடுத்த மும்பை அணி

கடந்த சில ஆண்டுகளாக மும்பை அணியில் இருந்த மிடில் ஆர்டர் பிரச்சனையை தீர்ப்பதற்காக, இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்கை அடிப்படை விலைக்கே ஏலத்தில் எடுத்தது மும்பை அணி.

எதிர்பார்த்தது போல் முதல் 3 போட்டிகளிலும் யுவராஜ் சிங்கை மிடில் ஆர்டரில் களமிறக்கியது மும்பை அணி. முதல் மூன்று போட்டிகளில் ஒரு அரை சதம் உட்பட 94 ரன்களை குவித்திருந்தாலும் தற்போது ஆவரேஜ் ஃபார்மில் தான் உள்ளார் யுவராஜ் சிங் .

டெல்லி அணிக்கு எதிரான முதல் போட்டியில் அரைசதம் அடித்தாலும், 30க்கும் மேற்பட்ட ரன்களை அக்சர் படேல் ஓவர்களில் தான் அடித்தார். அதே போல் தான் பெங்களுருக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் சஹால் ஓவரில் தொடர்ச்சியாக மூன்று சிக்சர்களை அடித்து நான்காவது பந்தில் அவுட்டானார்.

முதல் மூன்று போட்டிகளில் ஸ்பின்னர்களை ஓரளவு ஆடிய யுவராஜ் சிங் வேகப் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார். வேகப் பந்து வீச்சாளர்களிடம் அதிக டாட் பால் வைக்கிறார். இதனால் யுவராஜ் சிங் மேல் அதிருப்தி அடைந்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் .

எனவே மும்பை அணியின் அடுத்த போட்டியில் மிடில் ஆர்டரில் யுவராஜை நீக்கி விட்டு, கடந்த ஆண்டு மும்பை அணிக்காக 14 போட்டிகளில் விளையாடி 2 அரைசதம் உட்பட 275 ரன்களை குவித்த இஷான் கிஷானை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறக்த உள்ளது.

இஷான் கிஷான் பவர் ஹிட்டர் இல்லை என்றாலும், வேகம் மற்றும் சுழல் பந்து வீச்சை சமாளித்து ஆடுவார். இதனால் மும்பை அணியின் ரன் ரேட் மிடில் ஆர்டரில் பாதிக்காது என நினைக்கிறது மும்பை அணி. இதனால் அடுத்த போட்டியில் யுவராஜ் சிங் களம் இறங்குவது சந்தேகம் தான்.

உலகின் புகழ் பெற்ற 100 வீரர்கள் தோனி கோலிக்கு டஃப் கொடுத்த யுவராஜ் சிங்

உலகின் புகழ் பெற்ற 100 வினையாட்டு வீரர்களின் பட்டியலை இ.எஸ்.பி.என் ஸ்போர்ட்ஸ் வலைதளம் வெளியிட்டுள்ளது. ஒரு வீரரை சமூக வலைதளங்களில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை, கூகுள் டிரெண்டிங் மற்றும் அவர்கள் பெயருக்கான மதிப்பு ஆகிய மூன்றை அடிப்படையாக கொண்டு இப்பட்டியல் தயாரிக்கபட்டுள்ளது.

இந்த பட்டியலில் உலக புகழ் பெற்ற வீரர்கள் ரொனால்டோ, லீபிரான் ஜேம்ஸ், மெஸ்ஸி ஆகியோர் முதல் மூன்று இடங்களிலும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 7வது இடத்திலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 13வது இடத்திலும் உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் இருக்கும் யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் யாரும் எதிர்பார்க்காத வகையில் 18 மற்றும் 22வது இடங்களை பிடித்துள்ளனர்.

அதே போல் இந்திய கிரிக்கெட் அணியின் ஹிட் மேன் 46வது இடத்தையும், ரவிசந்திரன் அஸ்வின் 42வது இடத்தையும் பிடித்துள்ளனர். இப்பட்டியலில் இல்லாத உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் ெபயரை கமென்ட் செய்க.

இந்த முறை ஐ.பி.எல் கோப்பை இவர்களுக்கு தான் யுவராஜ் சிங் திட்டவட்டம்

இந்த முறை ஐ.பி.எல் கோப்பையை வெல்லப்போவது மும்பை இந்தியன்ஸ் அணி தான் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் யுவராஜ் சிங்.

கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக களமிறங்கிய யுவராஜ் சிங் 8 போட்டிகளில் விளையாடி வெறும் 65 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனால் இவரை அணியில் இருந்து கழட்டிவிட்டது பஞ்சாப் அணி.

இதனால் தனது விலையை 1 கோடியாக குறைத்து கொண்டு 2019க்கான ஐ.பி.எல் ஏலத்தில் இடம் பெற்றார் யுவராஜ் சிங். முதல் ரவுண்டில் ஏலம் போகாத யுவராஜை இரண்டாவது ரவுண்டில் அவரது அடிப்படை விலைக்கே வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி.

இதனை தொடர்ந்து கடந்த வாரம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கான ஃபோட்டே ஷுட்டில் கலந்து கொண்டார் யுவராஜ். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி பற்றி இன்று அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது.

கடந்த ஆண்டு எனது கிரிக்கெட் கேரியரில் மிக கடினமான ஆண்டு. இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமலும், ஐ.பி.எல் போட்டிகளில் சரியாக விளையாட முடியாமல் போனது. ஆனால் இம்முறை நான் நல்ல ஃபார்மில் உள்ளேன்.

இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக எனது முழு திறனை காட்டுவேன். கடந்த ஆண்டு போல் எனது ரசிகர்களுக்கு ஏமாற்ற மாட்டேன்.

இந்த ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்ற போவது மும்பை இந்தியன்ஸ் அணி தான். எங்களிடம் ரோகித் ஷர்மா, பும்ரா, ஹந்திக் பாண்டியா என உலக தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இந்த முறை போட்டியில் பட்டையை கிளப்பி 4வது முறையாக கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றும் என திட்டவட்ட மாக கூறியுள்ளார்.